Breaking News

இந்தியா முழுவதும் 150 ரயில்கள் தனியார் வசம் மத்திய அரசு ஒப்புதல்

அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும்  150  ரயில்கள் தனியார் வசம் மத்திய அரசு ஒப்புதல்


இந்தியா முழுவதும் உள்ள 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில் சேவைகள் வழங்க ரயில்வே துறையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்கள் 150 ரயில்களையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் எவ்வளவு என்பது குறித்தும் எங்கெங்கு ரயில்கள் இருக்கும் என்பது குறித்தும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback