Breaking News

1000 ஆண்டுகளுக்கு முன்பே சிலையில் ஸ்மார்ட் போன் செதுக்கினார்களா?

அட்மின் மீடியா
0
பின்னாளில் மொபைல் போன், ஸ்மார்ட் போன் வரப்போவதை முன்னாளில் அறிந்து அவற்றை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லில் செதுக்கினானோ தமிழன் 


இந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

அப்படியானால் உண்மை என்ன?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆகும்

மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வடித்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது

பல்வேறு கலாச்சாரங்களில் சிற்பங்கள் பெரும்பாலும் மத வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. 

அதன் அடிப்படையில் அந்த  

முதலாவது சிற்பம் தன்னை அலங்காரம் செய்து கொள்கின்றது அதன் மற்றொரு கையில் முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளது

இரண்டாவது சிற்பம் 

கையில்  உள்ள பலகையில் ஆணி கொண்டு எழுதுவது போன்று செதுக்கப்பட்டுள்ளது

அந்த இரு சிற்பங்களையும் தமிழன்  செதுக்கினான் என்றும்,  இன்று பயன்படுத்தும் மொபைல் போன், ஸ்மார்ட் போன் என சற்று மிகைப்படுத்தி சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்

அட்மின் மிடியா ஆதாரம் 

http://www.shunya.net/Pictures/WesternIndia/Gujarat/Palitana/Palitana.htm

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback