Breaking News

IIT, IIM மாணவ மாணவிகளுக்கு 2 லட்சம் கல்வி உதவித்தொகை

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்க அரசு உத்தரவு
  
உதவித்தொகை பெறும் மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback