Breaking News

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் வாக்களிப்பது எப்படி

அட்மின் மீடியா
0
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால்  வாக்களிப்பது எப்படி

வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்து விட்டாலோ  கவலை வேண்டாம். 

வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்களிக்கும் சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். இந்த சீட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.  

இத்துடன் "வாக்காளர் அடையாள அட்டை" எடுத்து செல்ல வேண்டும். 
 
வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் எந்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான வழிமுறையை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது.

1.பாஸ்போர்ட் (Passport)

2. ஓட்டுனர் உரிமம் (Driving License)

3. வங்கிக்கணக்கு புத்தகம் (Bank pass book)

4.பான் கார்டு (PAN CARD)

5.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அடையாள  அட்டை

6.ஆதார் கார்டு (Aadhar Card)

7.மத்திய தொழிலாளர் நலத்துறையின் ஹெல்த் இன்சுரன்ஸ் ஸ்மார்ட் அட்டை

8.மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியாதர்களின் ஆவணங்கள்.

9.அஞ்சல் அலுவலகங்களின் கணக்கு அட்டை, 

10. ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு, 

11. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை, என மாநில தேர்தல் ஆனையம் தெரிவித்து உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை  இல்லாதவர்கள் இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback