பொங்கல் பரிசு வழங்க தடை!
அட்மின் மீடியா
0
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
ஆண்டுதோறும் தைப் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
நடப்பாண்டிலும் பொங்கல் பரிசு வழங்கும் அறிவிப்பு வெளியானது
இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சுப்புலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்டங்களில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசை வழங்க அனுமதி கோரியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
Tags: முக்கிய செய்தி