Breaking News

குடியுரிமை மசோதாவிற்க்கு எதிர்ப்பு : ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா

அட்மின் மீடியா
0

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  தனது ஐ.பி.எஸ். அதிகாரி பதவியை  ராஜினாமா செய்துள்ளார்

பிற நாடுகளிலிருந்து சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

ராஜ்யசபாவில், நேற்று காலை இந்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பின்னர் . மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகி மசோதா வெற்றி பெற்றது

இந்நிலையில் மும்பையில் காவல்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, 

ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியதை அறிந்த உடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்

ஜனநாயக முறையில் தனது எதிர்ப்பை தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback