விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு
அட்மின் மீடியா
0
விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் மட்டும் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டுள்ளது, அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் குடிமக்கள் குறித்து தேசிய அளவில் பட்டியல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், என்ஆர்சி என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு என்றும் அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு அல்ல என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்
Tags: முக்கிய செய்தி