வைரலாக பரவும் கோழி புகைபடம் உண்மை என்ன? கோழி கறி சாப்பிடலாமா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் நோயினால் தாக்கப்பட்ட
ஒரு கோழியின் புகைப்படத்தை போட்டு கோழிகள் அனைத்திற்கும் நோய்
தாக்கிவிட்டது ஆகையால் கோழிகளை யாரும் சாப்பிட வேண்டாம் என்ற ஒரு செய்தியினை சமூக வலைதளங்களில் பலரும்ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா பொய்யா என்று ஆராய அட்மின் மீடியா களம் கண்டது
அந்தப் புகைப்படத்தில் காணும் ஒரு குறிப்பிட்ட கோழிக்கு நோய் தாக்கியுள்ளது உண்மைதான்
மனிதர்களுக்கு எவ்வாறு நோய் தாக்குமா அதேபோல் அனைத்து உயிரினங்களுக்கும் நோய் தாக்கும் என்பது இயற்கையான விடயம்தான் அதே போல் தான் அந்த கோழிக்கும் நோய் தாக்கப்பட்டு இருக்கிறது அதற்காக முற்றிலும் கோழிகறியை தவிர்க்கவேண்டும் என்பது ஏற்புடைய விஷயம் அல்ல
கோழிகறி சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்பதை ஆராய்வது இந்த பதிவின் நோக்கம் அல்ல
அந்த செய்தி உண்மையா உண்மை இல்லையா என்பதை அறிந்து கொள்வதே இந்த செய்தியின்
நோக்கமாகும்
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது போல் கோழி கறி கடையில் வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வாங்குங்கள்.
மேலும் பிராய்லர் கோழியைவிட நாட்டுகோழி சிறந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி