4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28, 29ம் தேதிகளில் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரிக் கடல் பகுதியில் சூறை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags: முக்கிய செய்தி