Breaking News

டிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. பாஸ்டேக் எப்படி பெறுவது? என்ன ஆவணங்கள் தேவை?

அட்மின் மீடியா
0
டிசம்பர் 1ம் தேதி முதல், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 பாஸ்டேக் என்றால் என்ன?

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 
தற்போது கட்டண வசூலுக்காக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 
இம்முறையில் பயணியர், குறிப்பிட்ட நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதேபோல், சரக்கு போக்குவரத்தும் தாமதமாகிறது. 
இதை தவிர்க்க, இந்நிலை மாறவேண்டும் என மத்திய அரசு 'பாஸ்டேக்' என்ற முறையை அறிமுகப்படுத்தியது
இதில் வாகனங்களின் முன் பகுதியில், 'பாஸ்டேக்' எனப்படும், ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படும்.
அதில் நாம்  நமக்கு தேவைப்படும் தொகைக்கு, 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.
சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது, செலுத்த வேண்டிய கட்டண தொகை, ரேடியோ அதிர்வலை மூலம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும். 
இதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியது இல்லை.


பாஸ்டேக் எப்படி பெறுவது?

புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்டேக் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, டோல் பிளாசாஸில்  ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம்.

அல்லது, NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம்.

தற்போது, ​​இந்த பட்டியலில் சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை உள்ளன. மேலும் Paytm மூலமும் FASTag ஐ வாங்கலாம்.

 பாஸ்டேக்  வாங்க என்ன ஆவணங்கள் தேவை? 

  • வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஆர்.சி புக் 


  • வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

  •  உங்கள் வங்கி பாஸ்புக் நகல்

  • ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று


அவ்வளவு தான் உங்கள் பாஸ்டேக் தயார்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback