Breaking News

மணிப்பூரில் மோடி அரசுக்கு எதிராக சுதந்திர போரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
மீண்டும் ஓரு சுதந்திரபோர் மோடி அரசுக்கு எதிராக.
புரட்சி ஆரம்பமாகிவிட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் மாணவர்கள்
#பாஜக தலைமை அலுவலகத்தை சூரையாடியதோடு
கவர்னர் மாளிகையையும் முற்றுகையிட்டனர்.
#மாணவர்கள்_புரட்சி நாடறிய செய்வோம்



என்ற ஓர் செய்தியினை பலரும் பலருக்கும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா?


உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?


என்ன நடந்தது மணிப்பூர் பல்கலைக்கழகத்தில்?


மணிப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.பி. பாண்டே மீது ஊழல் குற்றசாட்டை முன்வைத்த மாணவர் மற்றும் பேராசிரியர் சங்கத்தினர் அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.


இதனை தொடர்ந்து  பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.பி. பாண்டேவுக்கு பதிலாக தற்காலிக துணை வேந்தராக யுகிந்ரோ நியமிக்கப்பட்டார்.


அதற்காக  நடந்த பல்வேறு கட்ட போராட்டங்களில் ஒன்றுதான் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
அந்த  போராட்ட வீடியோவை  இங்கு மக்கள் தவறாக எடுத்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைல் போனில் பெற அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback