சீன பட்டாசுகளை விற்றாலும், வாங்கினாலும் குற்றம். புகார் தெரிவிக்கலாம்
அட்மின் மீடியா
0
சீன பட்டாசுகளை விற்றாலும், வாங்கினாலும் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிக நச்சுத்தன்மை கொண்டதும், குறைந்த விலையிலானதுமான சீன பட்டாசுகளின் சட்ட விரோத இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என எல்லாவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது
சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, மறைத்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, எந்த வகையில் கையாண்டாலும் அது சுங்க சட்டம் 1962-ன் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
சீன பட்டாசுகளை பயன்படுத்துவது என்பது வெடிபொருட்கள் சட்ட விதிகள், 2008-ன் கீழ் கெடுதியானது;
ஏனெனில் அவை சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லிதியம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரசாயனங்களை கொண்டுள்ளன இவையெல்லாம் மிகவும் ஆபத்தானவை, சுற்றுச்சூழலுக்கு எதிரானது.
சீன பட்டாசு விற்பனை குறித்து புகார் அளிக்க 044 - 25246800 எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Tags: முக்கிய செய்தி