Breaking News

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்

அட்மின் மீடியா
0
சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்


சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது. அதைப் பின்பற்றினோம்.

சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேல் இந்த விஷயத்தில் விளக்கமளிப்பது மத்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்தச் சம்பவம் பேரிடர் இல்லை, விபத்து. அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றினோம். என்ஐடி மண்ணியல் நிபுணர் உடனிருந்துதான் இதனைச் செய்தோம். சிலர் யூகத்தில் சொல்கின்றனர்.

மனிதனால் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. திறந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்றப்பட வேண்டும்," என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback