வங்கக் கடலில் புதிதாக உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் அந்தமான் அருகே நவம்பர் 4ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போதைய நிலவரப்படி நவம்பர் 4ம் தேதி வடக்கு அந்தமான ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இது வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
எனவே மீனவர்கள் வடக்கு அந்தமான் மற்றும் வடக்கு மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நவம்பர் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: முக்கிய செய்தி