வீட்டில் வைத்து இருக்கும் தங்கத்திற்கு வரியா! மத்திய அரசு விளக்கம்
அட்மின் மீடியா
0
வீட்டில் நீங்கள் வைத்து இருக்கும் தங்கத்திற்கு வரி விதிக்கும் கோல்டு அம்னெஸ்டி (gold amnesty scheme) திட்டத்தை கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து கொண்டிருந்தார்கள். அதாவது தங்கத்தை வைத்திருப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டம் ஒன்றை கொண்டு வரப்போகிறது அந்த திட்டத்திற்கு கோல்டு அம்னெஸ்டி ஸ்கீம் gold amnesty scheme என்று பெயர். இந்த திட்டம் வருமான வரி போல் நீங்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். எல்லோரும் அவர்கள் வருமானத்திற்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட அளவுதான் தங்கம் வைத்திருக்க முடியும். அதற்கு மேல் தங்கம் வைத்து இருந்தால் அதற்கு வரி கட்ட வேண்டும். உங்களிடம் பில் இல்லாமல் வாங்கிய தங்கம் இருந்தாலும் வரி கட்ட வேண்டும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று ஷேர் செய்தார்கள் . ஏன் பல முன்னனி மீடியாக்களும் வரிந்து கட்டி அந்த செய்தியை ஒளிபரப்பியது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இப்படி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. மேலும் இது ஒரு வதந்தியாகும் என விளக்கம் அளித்துள்ளது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி