மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று குஜராத்தில் 9- வகுப்பு பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி
அட்மின் மீடியா
0
மகாத்மா
காந்தி எப்படி தற்கொலை செய்து
கொண்டார் என்று குஜராத்தில் 9- வகுப்பு
பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ச்சி.
குஜராத்
மாநிலம் காந்தி நகரில் சுபலம்
ஷாலா விகாஸ் சங்குல் என்ற அரசு
மானியம் பெறும் சுயநிதிப்
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின்
அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுபலம்
ஷாலா விகாஸ் சங்குல் என்ற
அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில்
உள் மதிப்பீட்டு தேர்வு நேற்று சனிக்கிழமை
நடைபெற்றது.
அந்த தேர்வில்
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட
கேள்வித்தாளில், 'மகாத்மா காந்தி அவர்கள் எப்படி தற்கொலை செய்துகொண்டார்?''
என்று கேள்வி
கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
காந்தி நகரின் மாவட்ட கல்வி
அதிகாரி நேற்று சனிக்கிழமை சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற
உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் மிகவும் மோசமான கேள்விகள்
இடம்பெற்றிருந்தன. இந்தக் கேள்விகள் மிகவும்
ஆட்சேபிக்கத்தக்கவை, கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத்
தொடங்கியுள்ளோம். விசாரணை அறிக்கை கிடைத்ததும்
தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். சுபலம் ஷாலா விகாஸ்
சங்குல் பள்ளிகளின் நிர்வாகத்தால் இந்த வினாத்தாள்கள் அமைக்கப்பட்டன
மேலும் மாநில கல்வித் துறைக்கும்
இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
என்று மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.
Tags: முக்கிய செய்தி