ரூபாய் 24,167 ரூபாய்க்காக குடும்பத்தை தீர்த்துகட்டிய கயவன்
அட்மின் மீடியா
0
மேற்கு வங்கத்தில் பாந்து பிரகாஷ் பால், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் அக்டோபர் 8-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.
கடந்த 1 வாரமாக இனையத்தில் இது தான் ஹாட் டாபிக்.
அவர் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யபட்டார்
அவர் இஸ்லாமியர்களால் கொலை செய்யபட்டார்
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது
என்று அவர் அவர் விருப்பம் போல் கதை கட்டினார்கள். ஆனால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது. குற்றவாளி கைது செய்யபட்டுள்ளார்
அரசியல் காரணங்களுக்காகவே இந்தக் கொலைகள் நடந்திருக்கும் என பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டினர். பிரகாஷ் பாலின் தாயார் பேசுகையில், ``என் மகன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லை. பள்ளி ஆசிரியரான அவனுக்கு, அன்றாட பணிகளை செய்வதற்கே போதிய நேரமில்லை. என்று தெரிவித்திருந்தார் இந்த கருத்தினால் அரசியல் காரணம் இல்லை என்று நாங்கள் தெளிவாக நம்பினோம் என்று போலிஸார் கூறினார்கள்.
மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த இன்ஸூரன்ஸ் பேப்பர் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கொலை செய்யபட்டவர்களின் போன் விவரங்களை ஆய்வு செய்தபோது கொலையாளி சிக்கினான்
கொலையாளி கைது செய்த போலிஸார் கொலைக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
பிரகாஷ் பால் 11 வருஷத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். வருடத்துக்கு 24,167 ரூபாய் பிரகாஷ் மூலம் செலுத்திவந்துள்ளார். முதல் வருடம் தொகையைக் கட்டியதற்கான ரசீதைக் கொடுத்துள்ளார்.
அடுத்த வருடம் கட்டிய தொகைக்கான ரசீதை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, பிரகாஷிடமிருந்து சரியான பதில் இல்லை. தனது பணத்தைக் கொடுக்குமாறு பிரகாஷ் பால் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரகாஷ் அவரை கடுமையாகத் திட்டி அனுப்பியுள்ளார். தன்னை அவமான படுத்தியவரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார்.
விஜயதசமி அன்று இரவு 10.30 மணிக்கு பிரகாஷூக்கு போன் செய்து, உங்களை நேரில் பார்க்க வேண்டும், வீட்டுக்கு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
வீட்டுக்கு வந்தவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக்கொண்டு பிரகாஷைக் கொலை செய்துள்ளார். தடுக்க வந்த பக்கத்து அறையில் இருந்த 8 மாத கர்ப்பிணியான அவரது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்துள்ளார்.
பிரகாஷ் குடும்பத்தினரைக் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இன்ஷூரன்ஸ் விஷயத்தில் இருவருக்கும் இருந்த பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடந்தாகக் கூறியுள்ளார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: முக்கிய செய்தி