Breaking News

11,12ம் தேதி சென்னையில் போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
சீன அதிபர் மற்றும் பாரத பிரதமர் மோடி அவர்களின் வருகையையொட்டி வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில்

கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள்  காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தடை செய்யப்பட்ட நேரம்

11.10.2019 அன்று 12.30 மணி முதல் 2 மணி வரை: 

பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் "0" பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிடப்படும்.

சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம். 

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் சாலையை ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம். 

மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும். 


2 மணி முதல் 9 மணி வரை: ராஜீவ் காந்தி சாலை (ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். 

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. 


12.10.2019: அன்று 07.30 முதல் 2 மணி வரை


ராஜீவ் காந்தி சாலை(ஒஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். 

7 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. 

சென்னை வாசிகளுக்கும், புறநகரில் இருந்து சென்னை வரும் நபர்களுக்கும் அட்மின் மீடியா சார்பாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback