Breaking News

நாய்கடியினால் பாதிக்கபட்ட சிறுவன் வீடியோ உண்மையா..?

அட்மின் மீடியா
1
நாய்கடி நோய் ரேபிஸ் (Rabies) சம்பந்தமான வீடியோ உண்மையா..?



கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நாய்கடி விசயமாக ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்

அந்த வீடியோ உண்மையா? அந்த சிறுவன் யார்? அவனுக்கு நாய் கடித்ததால் அப்படி ஆனதா என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க 

அந்த வீடியோவின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த வீடியோவில் இந்தி பேசுகின்றார்கள் ஆகவே அது ஒரு வடநாட்டில் நடந்தாக இருக்ககூடும்.

மேலும் அந்த சிறுவனுக்கு நாய்கடித்து அதனால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை


அந்த வீடியோவில் நாய்கடி என்னும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு சிறுவன் தனது நாக்கை நன்றாக வெளியே நீட்டி நீட்டி  எச்சிலை திரும்ப திரும்ப  முழுங்குகிறான்.

இந்த ஒரு அறிகுறியே போதும் இந்த சிறுவன் நாய்கடியால் என்னும் ராபீஸ் நோயால் பாதிக்கபடவில்லை என உறுதியாக கூறலாம்.

என்று மருத்துவர்  Dr. D Mohamed kizhar இதனை மறுத்துள்ளார்


மேலும் நாய்கடியால்  Rabies  பாதிக்கப்பட்ட யாரும்  எச்சிலோ, பாலோ, தண்ணீரோ, கஞ்சியோ , ஜூசோ என எந்த திரவத்தையும் முழுங்க முடியாது. நாய்க்கடி நோய் எனப்படும் ரேபிஸ் மரு பெயர் Hydrophobia..அர்த்தம் திரவ உணவுக்கு பயம் என்னும் phobia

அதுமட்டுமின்றி நாய்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிகளை தனி கவனத்துடன் சுகாதாரத்துறை டீமாக மிக எச்சரிக்கையாக சிகிட்சை செய்வார்கள். 

ஆனால் இது போன்று எந்த பாதுகாப்புமில்லாமல் மிக அலட்சியமாக ட்ரீட்மெண்ட் செய்வதை காணும் போது இது நிச்சயமாக நாய்கடிக்கான ட்ரீட்மெண்ட் இல்லை என தெரிகிறது.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை சிகிச்சை தரும் மருத்துவ குழு, முழு பாதுகாப்புடன்  gloves, mask அணிந்து தங்களை தங்களையே பாதுகாப்புடன் செயல்படுவார்கள்.

இந்த நோய் சிகிச்சை அளிக்கும் போது, நோய் டாக்டரை அல்லது மருத்துவம் சார்ந்த நபர்களை தாக்கம் வாய்ப்பு அதிகம்.

இந்த சிறுவன் Rabies hydrophobia பாதிக்கப்பட்டிருக்கமான், இது மிக அரிதாக பாதிக்கும் Tourette syndrome என்கிற நரம்பியல் ரீதீயாக பாதிக்கப்பட்டிருக்கலாம்


ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாய் மாதிரி குறைப்பது எல்லாம் சினிமா தனமே ஒழிய, இதுவரை நான் அப்படி ஒன்றை கண்டதில்லை.என கூறுகின்றார்

மேலும்  Tourette syndrome என்ற பாதிப்பால் பாதிக்கபட்டவர்கள் வீடியோ கீழே உள்ளது



https://www.youtube.com/watch?v=PXGd-v4TAO8


மேலும் இதுவரை கிடைத்த தகவல்கள் மேலே பதிவிடப்பட்டுள்ளது  ஆனால் அட்மின் மீடியா இந்த செய்தியில் தன் தேடுதலை இன்னும் கைவிடவில்லை

வெகு விரைவில்.... முழுவிவரங்களுடனும் , ஆதாரங்களுடனும்......

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. இந்த மறுப்பு விளக்கம் அனுமானமாக மட்டும் தான் உள்ளது
    இதுவும் நேரடியாக உண்மை நிலை கண்டு பதியப்பட்ட மறுப்பு அல்ல

    ReplyDelete