ஜீப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தை - விழுந்தது கூட தெரியாமல் வீட்டுக்கு சென்ற குடும்பம்
அட்மின் மீடியா
0
ஜீப்பிலிருந்து தவறி விழுந்த குழந்தை - விழுந்தது கூட தெரியாமல் வீட்டுக்கு சென்ற குடும்பம்
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை ஓடும் ஜீப்பில் இருந்து
விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்று கொண்டிருந்த ஜீப் வளைவில் திரும்பும் போது ஜீப்பில்லிருந்து குழந்தை
தவறி சாலையில் விழுந்துள்ளது.
இதனை காரில் இருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை
ரோட்டில் தவறி விழுந்த குழந்தை ரோட்டின் மறுமுனைக்கு தவழ்ந்து வந்துள்ளது
அருகில் இருந்த சோதனைச்சாவடி அதிகாரி அந்த குழந்தையை பார்த்து எடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தை விழுந்தது கூடதெரியாமல் வீடு சென்று சேர்ந்த அந்த குடும்பம், குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரித்ததில் குழந்தை இடம் தெரிந்து பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டது
சாலையில் விழுந்த குழந்தை தவழ்ந்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு