எஸ்பிஐ நெட்பேங்க் இனி நீங்கள் லாக் செய்து கொள்ளலாம் எப்படி
அட்மின் மீடியா
0
நீங்கள் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக உங்களது இண்டர் நெட் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் மற்றவர்களால் திருடப்படுவதை தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
லாக் அல்லது அன்லாக் செய்வது எப்படி?
1. எஸ்பிஐயின் https://retail.onlinesbi.com/# நெட்பேங்கிங் பக்கத்துக்குச் செல்லவும்.
2. அதில் பர்சனல் பேங்கிங் லாக் இன் இடத்துக்குக் கீழே லாக் அல்லது அன்லாக் என்பதை கிளிக் செய்யவும்.
4. அதில் லாக் அல்லது அன்லாக் வசதியை தேர்வு செய்யவும்.
5. பிறகு உங்களது யூசர் நேம், வங்கிக் கணக்கு எண், கேப்சா ஆகியவற்றை பதிவு செய்யவும்.
6. பின்பு உங்கள் மொபைல் போனுக்கு ஒன்டைம் பாஸ்வேர்ட் வரும்அதனை பதிவு செய்து உங்கள் வங்கிக் கணக்கை லாக் செய்து கொள்ளலாம்.
உங்கள் வங்கிக் கணக்கினை நீங்கள் லாக் செய்துவிட்டால், அதன் பிறகு எந்த பணப்பரிமாற்றமும் அதில் நடைபெறாது.
மீண்டும் நீங்கள் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்த வேண்டும் என்றால், இதே முறையில் தான் உங்கள் இண்டர் நெட் வங்கிக் கணக்கை அன் லாக் செய்ய வேண்டும்.