Breaking News

வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கூறியதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது என சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை அறிய அட்மின் மீடியா களம் கண்டது


சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அதன் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி.  வங்கியில் டெபாசிட் செய்தவர்கள், ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும். மேலும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியால் புதிய கடன் கொடுக்க முடியாது. பழைய கடனை புதுப்பிக்க முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற வேண்டும் இந்த கட்டுப்பாடுகள் ஆறு மாதங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் என்று கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையை, அதன் இணையதளத்தில் இருந்து எடுத்தோம். அதில், “வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35-வின் கீழ் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்று குறிப்பிட்டு இருந்தனர்அந்த ஒரு வங்கியைத் தவிர இந்த உத்தரவின் கீழ் வேறு எந்த ஒரு வங்கிக்கும் இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்படவில்லை என்பது தெரிந்தது.


ஆதாரம்



எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அந்த கட்டுப்பாடு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே. மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback