Breaking News

சென்னையில் சிறுபான்மையினருக்கான கடன் திட்ட முகாம்

அட்மின் மீடியா
0
சென்னையில் சிறுபான்மையினருக்கான கடன் திட்ட முகாம்கள் எழும்பூர் உள்ளிட்ட 5 வட்டங்களில் நடைபெற உள்ளது.



அரசு சிறுபான்மையினர் தொழில் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க தனி நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரையும், 

சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் குழு உறுப்பினர் ஒருவருக்கு தலா ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வங்கிக் கடன், 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு ரூ.9 லட்சம் வரை கல்விக் கடன், 

ஆவின் நிறுவனம் மூலம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.70 ஆயிரம் கடன், 

தாட்கோ வங்கி சார்பில் தொழில் கடன்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

இக்கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்


இதில் புரசைவாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஜூலை 12 அன்றும்


கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 16-ஆம் தேதியும்,


வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 18-ஆம் தேதியும்,


சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 23-ஆம் தேதியும் 


கடன் திட்ட முகாம்கள் நடைபெறும்.

தேவையான ஆவணங்கள்

ஆதார்கார்டு

வங்கி புத்தகம்

ரேசன் கார்டு

பான் கார்டு

ஜாதி சான்றிதழ்

வருமான சான்றிதழ்

திட்ட அறிக்கை

கல்வி கடனாக இருந்தால்

பள்ளி மாற்றுச் சான்றிதழ், 
உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), 
கல்விக் கட்டணங்கள் செலுத்தியரசீது / சலான் (origina) மற்றும் 
மதிப்பெண் சான்றிதழ் 

இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறோம்

Give Us Your Feedback