Breaking News

மொபைல் போன் திருட்டா இனி கவலை வேண்டாம்!

அட்மின் மீடியா
0
திருடுபோன மொபைல்போன்களை கண்டுபிடிக்கும் புதிய வசதியை, மத்திய அரசு, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.



திருடப்பட்ட மொபைல் போன்களை, புதிய, 'சிம் கார்டு' மூலம் வேறொருவர் பயன்படுத்தும் நிலை உள்ளது.


சிம் கார்டு மாற்றினாலும், மொபைல் போனின், ஐ.எம்.இ.ஐ., எனப்படும், சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணை மாற்றினாலும் திருடப்பட்ட மொபைல்போனை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம் தற்போது தயாரிக்கப் பட்டுள்ளது.


இதற்காக, சி.இ.ஐ.ஆர்., எனப்படும், மத்திய சாதன அடையாள பதிவேடு உருவாக்கப்படும்.


இதன் மூலம், நாடு முழுவதும் விற்கப்படும் மொபைல் போன்கள் குறித்த தகவல்கள், ஒரே இடத்தில் இருக்கும்.


அதுபோல், காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் போனை செயலிழக்க செய்ய, மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனம் கொடுக்கும் தகவல், இந்த பதிவேட்டில் பதியப்படும்.
அதன் மூலம், அந்த மொபைல் போனில், வேறொரு மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனத்தின், சிம் கார்டை பயன்படுத்த முடியாது.


இச்சேவை கூடிய விரைவில் வர உள்ளது

Give Us Your Feedback