செயற்க்கை மழையை உருவாக்கும் நாசா வீடியோ உண்மையா
அட்மின் மீடியா
0
செயற்கையாக மழை பொழிவை ஏற்படுத்த மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை நாசா கண்டுபிடித்துள்ளதாக ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
வீடியோவின் ஆரம்பத்தில் நாசா விண்வெளி ஆய்வுக் கூட கட்டிடத்தில் இருந்து வெண் புகை வருகின்றது. நிருபர் ஒருவர் கட்டிடத்தில் வரும் புகையைப் பற்றிப் பேசுகிறார். அந்த புகை வானத்தில் மேகம் போல் திரண்டு நிற்கிறது. சிறிது நேரத்தில் மழை பெய்கிறது
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
கடந்த 29.10.2010ம் ஆண்டு நடந்தது மேலும் நாசா ஸ்பேஸ் ஷட்டல் சாலிட் ராக்கெட் பூஸ்டர் ஆய்வு மையத்தில் ஆர்எஸ்68 என்ற கமர்ஷியல் இன்ஜின் பரிசோதனையின்போது அரை மில்லியன் காலன் எரிபொருளைப் பயன்படுத்தி, உந்து விசையை ஏற்படுத்தி எப்படி விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்ற சோதனைதான் அது மேலும் அந்த வீடியோ பிபிசி-யால் எடுக்கப்பட்டது.
இந்த ராக்கெட் இன்ஜினில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை எரிபொருளாகப் பயன்படும்போது அது நீராவி புகை மண்டலத்தை உருவாக்குகிறது. நீராவி குளிரும்போது தண்ணீராக மாறுகிறது. தண்ணீர் கீழே வருவது மழை போல தெரிகிறது. பரிசோதனை நேரத்தில் அந்த பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை, காற்றின் ஈரப்பதத்தைப் பொருத்து மழையாகப் பொழிவது அமையும்.
செயற்கை மழையைப் பொழிய வைப்பது நாசாவின் நோக்கம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
மேலும் அந்த வீடியோவின் முழு பகுதை பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்
ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி