போர் போட்ட நீர் பனைமர உயரத்திற்க்கு வந்ததா
அட்மின் மீடியா
0
நெல்லை மாவட்டம் சிறுக்கன் குறிச்சி கிராமத்தில் ஒரு வீட்டில் போர் போட்டார்கள் அதில் அதிக அளவு பூமியில் இருந்து தண்ணீர் பீரிட்டு வந்தது என்று ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது உண்மை நிலவரம் என்னவென்று தெரிந்து கொள்வோம்
பூமியில் போர் போட்டால் இது போல் தண்ணீர் வராது என்பது நம் அனைவருக்கும் தெரியும்
அப்படியானால் அடியில் உள்ள குழாய் ஏதேனும் உடைந்து தான் தண்ணீர் வருகின்றது என்ற கோனத்தில் செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம்
நாம் தேடிய பலனும் கிடைத்தது
ஆம் கடந்த 29.06.2019 அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறுக்கன் குறிச்சியில் உள்ள ஓர் வீட்டில் போர் போடும் போது அருகில் செல்லும் குடிநீர் பைப் லைன் எதிர்பாராத விதமாக உடைந்து அதில் வரும் நீர் பனைமர உயரத்திற்க்கு நீர் வந்தது
இதுதான் உண்மை நிலவரம் ஆனால் அந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் பொய்யான தகவலை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்
ஆகையால் இனியாவது பார்த்ததை எல்லாம் பரப்பாமல் செய்தியை ஆராய்ந்து பரப்பும்படி அட்மின் மீடியாவின் சார்பாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
ஆதாரம்:
Tags: மறுப்பு செய்தி