Breaking News

தமிழ்நாடு போலீஸ் என்ற பெயரில் பரவும் வதந்தி!

அட்மின் மீடியா
0
ரிக்ஷாவில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்துப் பாடல் ஒலித்தபடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என்று தமிழ்நாடு காவல்துறை லோகோவுடன் பத்திரிகையில் வெளியான செய்தி போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
கீழ் உள்ள ஆய்வு முடிவு படிக்கும் முன்பு ஒன்றை மனதில் புரிந்து கொள்ளுங்கள் மேலே உள்ள செய்தி பற்றிதான் நாம் பதில் அளிக்கின்றோம். அதற்காக கொள்ளையர்கள் இல்லை என்று நாம் கூறவில்லை
தமிழ்நாடு போலீஸ் லோகோவுடன் இருப்பதால், அதன் இணையதளத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியாக உள்ளதா என்று தேடினோம்.  ஆனால், அது போன்ற அறிவிப்பு தமிழக போலிஸ் இனையதளத்தில் இல்லை
ஆதாரம்:
வேளச்சேரியில் நான்கு வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் உள்ளதா என்று அறிய, வேளச்சேரி காவல் நிலையத்தைத் அட்மின் மீடியா சார்பாக போன் மூலம் தொடர்புகொண்டோம். “கடந்த இரண்டு ஆண்டுகளில் அப்படி எந்த ஒரு சம்பவமும் வேளச்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லை. இது வெறும் வதந்தி. இருப்பினும் முன்பின் தெரியாதவர்கள் உங்கள் பகுதிக்கு வந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுஎன்றனர். 
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback