செயலிழந்த வாட்ஸப்,பேஸ் புக்
அட்மின் மீடியா
0
சற்று முன்னிருந்து உலகம் முழுவதும் வட்சப் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் செயலிழந்துள்ளது!
உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸப்பில் டவுன்லோடு செய்து பார்க்க முடியாத பிரச்னை ஏற்படுள்ளது
வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானவை.
இவற்றில் கடந்த சிலமணி நேரமாக புகைப்படங்களை டவுன்லோடு செய்து பார்க்க இயலவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அனுப்ப முடியவில்லை என்றும் புகைப்படங்களை பார்க்க முடியவில்லை என்றும் சுத்தமாக வேலை செய்யவில்லை என்றும் பல ஆயிரம் பயனார்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளித்து வருகிறார்கள்.
இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் வசதிகள் எதுவும் செயல்படவில்லை. இதேபோல் இன்ஸ்டாகிராமும் செயல்படவில்லை.
கூடிய விரைவில் பிரச்சனை சரிசெய்யபடும் என்று தெரிகின்றது