போலி டாக்டர்களை ஒரு மெசஜ் மூலம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவரின் , பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்' டைப் செய்து `56767' என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும்.
உதாரணமாக, `TNMC REGNO 53065' என்று டைப் செய்து `56767' என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: மற்றும் அவரது படிப்பு. என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS' மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம்.