மோடியின் ஆட்டம் ஆரம்பம் மீண்டும் முத்தலாக்
அட்மின் மீடியா
0
நாடாளுமன்றத்தில் புதிதாக முத்தலாக் தடை மசோதாவை
தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முத்தலாக்கிற்கு
தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முத்தலாக்கிற்கு சட்டப்பூர்வமாக
தடை விதிக்கும் நோக்கத்தில், கடந்த மோடி ஆட்சியில், 'முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள்
பாதுகாப்பு)' என்ற மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,
ராஜ்யசபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மசோதாவில் திருத்தம் செய்தும் கூட
நிறைவேற்ற முடியவில்லை.
எனவே 2 முறை அவசர சட்டம் பிறப்பித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தியது
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், இன்று
நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் 17ம் தேதி தொடங்க உள்ள, நாடாளுமன்ற, கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை மசாதோ தாக்கல்
செய்யப்பட உள்ளது.