அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்?
அட்மின் மீடியா
0
லக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன
இளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார்
தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும், அதை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றதும் அது உண்மையா என்றுகூட யோசிக்காமால்
பலரும் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கியுள்ளனர்.
பலரும் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் லக்னோவில் உள்ள Itaunja என்ற பகுதியில் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களும் தாக்குதலுக்கு ஆளானவர்களும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் இல்லை…
சகோதரனின் பெயர் முகமது ஷாருக்கான், தங்கையின் பெயர் ஷப்னம்.
தாக்குதல் நடந்த அன்று, இரவு ஷாரூக் மற்றும் ஷப்னம் போலீசில் புகார் செய்யச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த காவலர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
அப்போதுதான் ஷாரூகான், தங்கள் குடும்பத்தினரை சிலர் தாக்கிவிட்டனர் என்று கூறும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை லக்னோ எஸ்.எஸ்.பி பார்வைக்கு சென்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லக்னோ போலீசார் வெளியிட்ட ட்வீட்டும் நமக்குக் கிடைத்தது. அதில், “லக்னோவின் Itaunja காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் வீடுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அது இரண்டு குழு சண்டையாக மாறிவிட்டது. வீடியோவில் உள்ள ஷாரூக் மற்றும் ஷப்னம் நள்ளிரவு 1.25 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தனர். குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக குழு அமைக்கப்பட்டது.4 நபர்கள் கைது செய்யபட்டுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது
ஆதாரம் 1
ஆதாரம் 2
https://www.boomlive.in/video-of-assault-victims-pleading-for-an-fir-shared-with-communal-spin/
இதன் மூலம் இந்து பெண்ணை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
.
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
தெருசண்டையில் நடந்த தாக்குதலை முஸ்லிம்கள் மீது எப்படியாவது வெறுப்புணர்வை பரப்பவேண்டும் என்ற தீயநோக்கத்தில் முஸ்லிம் பெண்ணையும் அவள் அண்ணனையும் இந்துவாக மாற்றியுள்ளனர்!!
இவ்வளவு மீடியா சமூகவலைதளங்கள் உள்ள காலத்திலேயே இப்படி கூசாமல் பொய் பேசுகிறார்களே?
அந்த காலத்தில் எவ்வளவு பொய் சொல்லி ஏமாற்றியிருப்பார்கள்!!
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி