Breaking News

கனரா வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா..

அட்மின் மீடியா
0

வங்கி, ‘ஆன்­லைன்பணப் பரி­வர்த்­­னை­­ளுக்­கான கட்­­ணத்தை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி சமீ­பத்­தில் அறி­விப்பு வெளி­யிட்­டது. இந்த அறி­விப்­புக்கு, வங்கி வாடிக்­கை­யா­ளர்­­ளி­டம் மிகுந்த வர­வேற்பு இருந்­தது.

இந்­நி­லை­யில், வங்­கி­களில் நேர­டி­யாக பணம் செலுத்­து­­தற்­கான கட்­­ணங்­கள் உயர்த்­தப்­பட்­டுள்ளன. இது தொடர்­பான அறி­விப்பு பலகை, பல்­வேறு வங்­கி­களில் வைக்­கப்­பட்­டுள்­ளது.




முன்னர் மூன்று முறைக்கு மேல் பணத்தை எடுத்தால் வங்கிகளால் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது  கனரா வங்கி, பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ரூ.50,000 வரை இலவசமாக வங்கியில் பணம் டெபாசிட் செய்யலாம், இதற்கு எந்த கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

 

அதன் பின்னர் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ரூ.1 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இந்தக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ. 50,000 வரை இருக்கும் என்றும். இத்துடன் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளது

Give Us Your Feedback