காவலர்களுடன் குடிபோதையில் சண்டையிட்ட சட்ட அமைச்சர் மகன் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அமைச்சர் மகன்; போலீசாருடன் சண்டையிட்டாரா?
‘’குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசாருடன் சண்டையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மகன்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா
குறிப்பிட்ட வீடியோ காட்சியில் உள்ள அவர் அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் கிடையாது.
இந்த சம்பவம் சென்னை நீலாங்கரையில் ஜூன் 25 அதிகாலை நேரம் நிகழ்ந்ததாகும்.
மதுரை மாவட்டம், விளாங்குடியை சேர்ந்த நவீன் என்பவர் சென்னை திருவான்மியூரில் பழ ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
அவர் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றபோது, குடிபோதையில் இவ்வாறு விபத்து ஏற்படுத்திவிட்டு, நீலாங்கரை போலீசாரிடம் ரகளை செய்திருக்கிறார்
அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்
ஆனால் சிலர் அவர் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் அவர்களின் மகன் என்று பொய் செய்தியினை பரவவிட சட்ட அமைச்சர் காவல்நிலையம் சென்று புகார்கொடுக்கும் அளவிற்க்கு சென்றுள்ளதுு
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்