Breaking News

தமிழுக்கு தடை ! தடை ! தடை!

அட்மின் மீடியா
0

ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான உரையாடலின் போது , தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது


ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான ஆலோசனையின் போது ஆங்கிலம் அல்லது ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும். அப்போது, பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழியை பயன்படுத்தும் போது, ஒருவர் கூறுவது மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவு, அவர்களுக்கு தெளிவாகவும், முழுமையாகவும், புரியும் வகையில் இருப்பதை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்ய வேண்டும். இதே போல், ஸ்டேசன் மாஸ்டர்கள் விடுக்கும் கோரிக்கை அல்லது எடுக்கும் நடவடிக்கையை, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முழுமையாக புரிந்து கொள்வதை, ஸ்டேசன் மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Give Us Your Feedback