Breaking News

பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி!

அட்மின் மீடியா
0
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினரை படுகொலை செய்யும் குண்டர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு.


நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களை ஒடுக்க சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.

பசுக்களை பாதுகாக்கிறோம் என கூறிக் கொண்டு சிறுபான்மையினரை படுகொலை செய்யும் சம்பவங்கள் வட இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

மாட்டிறைச்சி வைத்திருந்தாலும் சாப்பிட்டாலும் குற்றம் என்கிற சூழலை இந்த பசுபாதுகாப்பு குண்டர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.


கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், பசுபாதுகாப்பு குண்டர்களை கடுமையாக எச்சரித்திருந்தது.


மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்குவோருக்குகுறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

அவர்கள் கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடுபட்டால், தண்டனை இரட்டிப்பாக்கப்படும்



நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முதலாவது மாநிலம் என்கிற பெருமைக்குரியதாகிறது மத்திய பிரதேசம்.

Give Us Your Feedback