Breaking News

ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு

அட்மின் மீடியா
0
வாக்காளர் வரையறை பணி முடிந்தது - ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல்


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது.
அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இட ஒதுக்கீடு பிரச்சினையை சரி செய்த பிறகும் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதுபற்றி கோர்ட்டில் தமிழக அரசு கூறும்போது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதாகவும், அந்த பணிகள் நிறைவுற்றதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டியது. உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறி இருந்தது.
இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி நடைபெறும் இந்த பணிகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்
எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது


Give Us Your Feedback