Breaking News

தமிழகத்தில் மறு ஓட்டுபதிவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடிகளில், வரும் 19ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஏப்.,18ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவின் போது சில இடங்களில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன. 


தமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், 13 ஓட்டுச்சாவடிகளில் மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


13 ஓட்டுச்சாவடிகளில் வரும் மே 19ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ அறிவித்துள்ளார்.


மறுஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்கள்:


தருமபுரி - 8

தேனி - 2

திருவள்ளூர் - 1

கடலூர் - 1

ஈரோடு - 1

மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள்

திருவள்ளுர்: பூந்தமல்லியில் உள்ள 195வது வாக்குச்சாவடி


தருமபுரி: 181, 182, 192, 193, 194, 195, 196, 197வது வாக்குச்சாவடிகள்


கடலூர்: பண்ருட்டி அருகே 210வது வாக்குச்சாவடி


ஈரோடு: திருமங்கலத்தில் உள்ள 248வது வாக்குச்சாவடி


தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ள 67வது வாக்குச்சாவடி,பெரியகுளத்தில் உள்ள 197வது வாக்குச்சாவடி

Give Us Your Feedback