வெளியூரில் உள்ளவர்கள் ஓட்டு போடமுடியுமா
அட்மின் மீடியா
0
*பொய்யான தகவலை பரப்பாதீர்கள்*
~வாக்களிக்க சொந்த ஊருக்கு போகவேண்டும் என்கிற அவசியமில்லை. இனி நாம் எங்கிருக்கின்றோமோ அங்கேயே வாக்களிக்கமுடியும்
*அதற்கு இண்டர்னெட்டில் nvsp.in என்ற இனையதளத்தில் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்களுக்கு உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.~
என்ற ஒரு செய்தி இது தேர்தல் நேரம் என்பதால் சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.
மேலே உள்ள அந்த செய்தி பொய்யானது.
இதில் படிவம் 6 என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டர் ஐடி இல்லையென்றாளோ அல்லது வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றாளோ பூர்த்தி செய்வதற்கான படிவம்.
மேலும் வெளியூர்களில் வசிப்பவர்கள் உங்களுக்கு எந்த பாகத்தில் எந்த தொகுதியில் எந்த வரிசையில் உங்களுக்கு வாக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அங்கு தான் ஓட்டு போட முடியும்.
எனவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்.
பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்