Breaking News

சிம் கார்டு வாங்க இனி ஆதார் கார்டு

அட்மின் மீடியா
0

ஆதார் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்



வங்கிக் கணக்குத் தொடங்கவும், புதிய சிம் கார்டுகளை வாங்கவும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வங்கிக் கணக்கு தொடங்கவோ, சிம் கார்டு வாங்கவோ ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அமல்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் ஆதார் திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆதார் அவசரச் சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

Share this