Breaking News

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை - இனி எந்த வயதிலும் படிக்கலாம் இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சட்டப் படிப்புகளில் (LLB) சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்திய பார் கவுன்சில் முழுமையாக நீக்கியுள்ளது. இனி எந்த வயதிலும் படிக்கலாம்

சட்டப் படிப்புகளில் (LLB) சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்திய பார் கவுன்சில் (BCI) முழுமையாக நீக்கியுள்ளது. இதனால், எந்த வயதைச் சேர்ந்தவர்களும் இனி 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் கால அளவிலான சட்டப் படிப்புகளில் தடையின்றி சேர்ந்து படிக்கலாம்.

5 நவம்பர் 2026 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பை நீக்கும் இறுதி மற்றும் தீர்க்கமான தீர்மானத்தை இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றியது.

நவம்பர் 6 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வயது வரம்பிற்கு எதிராக நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது.

இதற்கு முன்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும் (பொதுப் பிரிவு), 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக BCI விதித்திருந்தது. தற்போது இந்த தடைகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.

சட்டம் பயில வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், கல்வித் தகுதி மற்றும் வருகைப்பதிவு போன்ற பிற விதிகள் ஏற்கனவே தரத்தை உறுதி செய்வதால், வயது வரம்பு தேவையில்லை என்றும் BCI தெரிவித்துள்ளது.

எனவே, கல்வித் தகுதி (12-ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி) மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களின் எந்த வயதிலும் சட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்.

முன்பு 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 20 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 22 வயதும் உச்சவரம்பாக இருந்தது. 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 45 வயது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து வயதினரும் சட்டப்படிப்புகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback