Breaking News

எவரெஸ்ட் சிகரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

எவ்ரெஸ்ட் சிகரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழப்பு வைரல் வீடியோ

நேபாள எவரெஸ்ட் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் சென்னையை சோ்ந்த வசந்தகுமார் என்பவர் பலி. தரையிறங்கும் போது நடந்த விபத்தில் விமானிகள் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம்.



நேபாளத்தின் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகே உள்ள ஃபெரிச்சே கிராமத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சென்னையை சோ்ந்த வசந்தகுமார் என்பவர் உயிரிழந்தார், மேலும்  தரையிறங்கும் போது நடந்த விபத்தில் விமானிகள் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சோலுகும்பே மாவட்டத்தின் பொரிச்சே என்ற இடத்தில் உள்ள ஹெலிபேடில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.எவரெஸ்ட் மலைப்பயணப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் சற்றே அதிகமான உயரத்தில் உள்ளது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இந்நிலையில், இந்த விபத்து குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேபாளத்தின் மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லவும், அவசர மருத்துவ உதவி மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லவும் சிறிய ரக ஹெலிகாப்டர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback