75 ஆயிரம் வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முக்கிய விவரங்கள்:தள்ளுபடி தொகை: கூட்டுறவு வங்கிகள் / நிறுவனங்கள் மூலம் பெற்ற ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலவரையறை நீட்டிப்பு: இந்தத் தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி: இப்பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பயனாளிகள்: இதன் மூலம் சுமார் 12 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை, கடன் அளவுக்கு ஏற்ப தள்ளுபடி செய்திருந்தது தமிழக அரசு. ஆனால் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளும் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது தமிழக அரசு.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூபாய் 9,062.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடியின் மூலம் தமிழ்நாட்டில் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
