Breaking News

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நவ.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நவ.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடப்படும். 

அதன்படி இந்தாண்டு 470 கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 20 -ஆம் தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback