Breaking News

SBI வாடிக்கையாளர்கள் ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + GST அபராதம் முழு விவரம் இதோ SBI customers to pay Rs. 15 + GST ​​penalty if they withdraw money more than 4 times from ATM

அட்மின் மீடியா
0

SBI வாடிக்கையாளர்கள் ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 + GST அபராதம் முழு விவரம் இதோ SBI customers to pay Rs. 15 + GST ​​penalty if they withdraw money more than 4 times from ATM



எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கி, கிளை வழியாகத் திறக்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுக்கும் கட்டணங்களை, 1 அக்டோபர் 2026 முதல் திருத்தியுள்ளது. 

ஒரு மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு 15 ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.15 மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.இருப்பினும், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback