விவசாய நிலங்களுக்கு 'NOC' சான்றிதழ் தேவையில்லை! அரசானை வெளியிட்ட தமிழக அரசு
இனி 'NOC' சான்றிதழ் தேவையில்லை! நிலம் வாங்குபவர்களுக்கும் ரியல் எஸ்டேட்டர்களுக்கும் செம்ம நியூஸ்!
தமிழ்நாட்டில் திட்டமிடப்படாத பகுதிகளில் விவசாய நிலங்களை விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு மாற்றும் நடைமுறைகளை எளிதாக்க தமிழ்நாடு அரசு திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாறுவதை கட்டுப்படுத்த, 2017ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, 2017 ல் பிறப்பித்தது.
திட்டமில்லா பகுதிகளில், தரிசாக உள்ள விவசாய நிலங்களை, பயன்பாடு மாற்றம் செய்வதற்கு, இதுவரை வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால், தரிசாக உள்ள விவசாய நிலங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்தால், நகர் மற்றும் ஊரக அமைப்பு எனப்படும், டி.டி.சி.பி., இயக்குனர் நேரடியாக முடிவு எடுக்கலாம்.இதே போல், நன்செய் நிலங்களை பயன்பாடு மாற்றம் செய்யும் போது, வேளாண் துறை இணை இயக்குனர், மாவட்ட கலெக்டர் அளித்த முன் அனுமதியை, டி.டி.சி.பி., இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்
இச்சட்டத்தின் கீழ் நன்செய் நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலும், புன்செய் நிலங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநரிடம் இருந்து தடையில்லாச் சான்றும் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிலப் பயன்பாட்டு மாற்ற விதிகள் மற்றும் திருத்தங்கள்விண்ணப்ப முறை: சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வழியாக உரிய ஆவணங்களுடன் இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். நில மாற்றம் கோரும் நன்செய் நிலப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு மற்றும் முன்னனுமதி பெறப்பட வேண்டும்
புன்செய் நிலங்களுக்கு வேளாண்மைத் துறையின் மூலமாக 30 நாட்களுக்குள் தடையில்லாச் சான்று (NOC) பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் சந்தை மதிப்பில் 3% நிலப் பயன்பாட்டு மாற்றக் கட்டணமாகவும், குறைந்தபட்சச் பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும். நிலங்களை மாற்றுவது தொடர்பாக வேளாண்மை இயக்குனர் திருப்தி அடைந்தால் மட்டுமே எதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்

