Breaking News

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு கட்டாயம் இன்று சிறப்பு e-KYC முகாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை முடிக்காதவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று (ஆக.02) பயோமெட்ரிக் கைவிரல்ரேகை பதிவு சிறப்பு முகாம் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று e-KYC சிறப்பு முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) அறிவித்துள்ளார். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் பொது விநியோகத் திட்ட சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைவிரல் ரேகையும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை e-KYC பதிவு செய்யாதவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் நேரில் கலந்து கொண்டு கட்டாயம் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback