Breaking News

கேஸ் சிலிண்டர் e-KYC செய்ய காலக்கெடு மேலும் நீட்டிப்பு! e-KYC செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

கேஸ் சிலிண்டர் e-KYC செய்ய காலக்கெடு மேலும் நீட்டிப்பு! e-KYC  செய்வது எப்படி



வீட்டு உபயோக சிலிண்டருக்கான E-KYC எனப்படும் சுயவிவரத்தை பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு eKYC கட்டாயம் - வீட்டிலிருந்தே ஈஸியா இணைப்பது எப்படி?  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/08/16-ekyc-indane-gas-e-kyc-online.html

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. 

இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நுகர்வோர் e-KYC-ஐ ஆன்லைனிலும், நேரடியாகவும் மேற்கொள்ளலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலி மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY செயலி மூலமாகவும் e-KYC செய்யும் வசதி உள்ளது. மேலும், கேஸ் விநியோகிக்கும் நபர் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ சரிபார்ப்பை முடிக்கலாம்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்ட நிலையில் 15 சதவீத வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.. அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை ஏற்று மத்திய அரசு கியாஸ் சிலிண்டர்கள் பெற ஆவணங்களை சமர்ப்பிப்பது வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோக LPG சிலிண்டர் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, தற்போது 31.08.2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே e-KYC செய்வது எப்படி?

நீங்கள் பயன்படுத்தும் Indane / Bharatgas / HP Gas நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியைத் திறக்கவும்

.உங்கள் LPG Consumer ID / மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.e-KYC / Aadhaar Authentication வசதியைத் தேர்வு செய்யவும்.

ஆதார் விவரங்களைச் சரிபார்த்து OTP மூலம் உறுதிப்படுத்தவும்.கேட்கப்பட்டால் Face Authentication செய்து e-KYC-ஐ நிறைவு செய்யவும்

e-KYC வெற்றிகரமாக முடிந்ததற்கான confirmation-ஐ சேமித்துக் கொள்ளவும்.

மொபைல் மூலம் செய்ய முடியாதவர்கள் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர்/கேஸ் ஏஜென்சியை அணுகியும் e-KYC செய்யலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback