Breaking News

திருமணம் ஆகும் பெண்களுக்கு அண்ணனின் சீர் ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 திருமணம் ஆகும் பெண்களுக்கு அண்ணனின் சீர்த்திட்டத்திற்காக 812 கோடி ஒதுக்கீடு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு


தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு, ஏழை மகளிரின் திருமணச் செலவுகளை குறைக்கும் வகையில் 'அண்ணன் சீர்' திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. 

தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்ற இந்தத் திட்டம், திருமணம் செய்துகொள்ளும் ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். 

இந்நிலையில் இது குறித்து பட்ஜெட்டில் பேசிய மரிய வில்சன்,திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின் சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு என அறிவிவித்துள்ளார்.

அண்ணனின் சீர்திருமண நலத்திட்டம் – பெண்களுக்கு புதிய நலத்திட்டம்!

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையில், பெண்களின் திருமண நலனை மேம்படுத்தும் நோக்கில் "அண்ணனின் சீர்திருமண நலத்திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

பெண்களின் திருமண நலனுக்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும்

 இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback