மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை..! நாடுமுழுவதும் புழக்கத்தில் உள்ள 239 மருந்து மாத்திரைகள் தரமற்றவை முழு விவரம் இதோ
மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை..! நாடுமுழுவதும் புழக்கத்தில் உள்ள 239 மருந்து மாத்திரைகள் தரமற்றவை Drug Quality Control Board warns..! 239 pharmaceutical tablets circulating across the country are of substandard quality. Here is the full details
நாடு முழுவதும் விற்பனையாகும், மருந்து மற்றும் மாத்திரைகள், மத்திய, மாநில, மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்களின், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் அதிகமான மருந்து, மாத்திரைகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.r
இதில், காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும், 239 மருந்துகள் தரமற்றவை; ஒரு மருந்து போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் ஒரு மருந்து முற்றிலும் போலியானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ள மருந்துகளின் முழுமையான பட்டியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் விவரங்களை அறிய, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் CDSCO அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்
Tags: தமிழக செய்திகள்
