Breaking News

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்...தவெக அரசு அறிவித்த புதிய பெயர் என்ன தெரியுமா

அட்மின் மீடியா
0

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்...தவெக அரசு அறிவித்த புதிய பெயர் என்ன தெரியுமா




பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் பெயரைத் தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. முந்தைய ஆட்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' இனி புதிய பெயரில் அழைக்கப்படும். இத்திட்டத்திற்குப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தவெக அரசு முறைப்படி பெயர் சூட்டியுள்ளது.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரைக் கௌரவிக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. கொள்கைத் தலைவரான தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல் இந்த விரிவாக்கம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மேலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்து பள்ளிகளிலேயே சுவையான காலை உணவை உண்ண முடியும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback